×

திமுக மாமன்ற உறுப்பினர் ஷீபா வாசி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக மாமன்ற உறுப்பினர் ஷீபா வாசி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஷீபா வாசு இன்று (16-02-2023) அதிகாலை உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற செய்திகேட்டு மிகவும் வருந்தினேன். மக்கள் பணியாளராகவும், கழகத்தின் செயல்வீரராகவும் இருந்து சிறப்புறப் பணியாற்றி வந்த அவரது மறைவு பெரிதும் வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும், 122-ஆவது வார்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு கூறினார்.


Tags : Chief Minister ,M.K.Stal ,DMK ,Sheeba Vasi , Chief Minister M.K.Stal condoles death of DMK MP Sheeba Vasi
× RELATED வடமாநிலங்களில் பரப்புரை செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!